நடிகர் அஜித் குமார் நடித்த 'விடாமுயற்சி' திரைப்படம் பிப்ரவரி 6, 2025 அன்று வெளியிடப்பட உள்ளது. இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில், லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில், அஜித்துடன் த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் ரசிகர்களிடமிருந்து நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
படத்தின் முன்பதிவு (ப்ரீ புக்கிங்) தொடங்கிய முதல் நாளில், தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 2.69 கோடி வசூலித்துள்ளது.
மேலும், உலகளாவிய அளவில் ப்ரீ புக்கிங்கில் ரூ. 25 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் படத்தின் முதல் நாள் வசூல் உலகளவில் மாபெரும் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
'விடாமுயற்சி' திரைப்படத்தின் ப்ரீ புக்கிங் வசூல், அஜித் குமாரின் முன்னைய படங்களை விட அதிகமாக இருப்பதால், ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments: